பொது ஆகஸ்ட் 02,2021 | 22:44 IST
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முக்கிய கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த நாட்களில் இந்து சமய அறநிலைய கோயில்களில் சுத்தப்படுத்தும் பணியை செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்படி சென்னை வடபழநி முருகன் கோயிலில் உழவாரப்பணி காலையில் துவங்கி மாலை வரை நடந்தது. கோயில் சிற்பங்களில் படிந்துள்ள தூசியை சுத்தப்படுத்தி தண்ணீர் பீய்ச்சியடித்தி கழுவினர். சிலைகளில் படிந்திருந்த எண்ணெய் பிசுக்கை அகற்றினர். கோயில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
வாசகர் கருத்து