Advertisement

மத கலவரத்தை தடுக்க விநாயகர் சிலை அகற்றம்

பொது ஆகஸ்ட் 04,2021 | 07:59 IST

Share

திருச்செங்கோடு நாமக்கல் சாலை கிரிவலப்பாதை பிரிவில் 30 ஆண்டு பழமையான சர்ச் உள்ளது . 3 மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கத்துக்காக சர்ச்சின் ஒரு பகுதி இடத்தை , அதிகாரிகள் உத்தரவின்பேரில் காலி செய்துள்ளனர். நேற்று காலை அந்த இடத்தில் இந்து அமைப்பினர் திடீரென்று விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவர்கள் புகார் அளித்ததால் , சிலையை எடுக்குமாறு போலீசார் இந்து அமைப்பினரிடம் கூறினர். இந்து சமய அறநிலையத்துறை இடத்தில்தான் சிலையை வைத்துள்ளோம், கிறிஸ்தவர்கள் சட்டவிரோதமாக இந்த பகுதியை ஆக்கிரமித்துவிட்டதாக கூறி சிலையை அகற்ற மறுத்துவிட்டனர். விநாயகர் சிலையை அகற்ற வலியுறுத்தி கிறிஸ்தவர்கள் சர்ச் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால் 100க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். வருவாய் கோட்டாட்சியர் இளவரசி, இந்து அமைப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க இரவோடு இரவாக அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது. அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டதில் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


வாசகர் கருத்து (7) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

oce
oce , . 04-ஆக-2021 | 16:32:49 IST Report Abuse

இயற்கையையும் வானையும் அறிந்தவன் இந்து. பிரபஞ்சத்தில் பல இயற்கை சக்திகள் கலந்துள்ளன.அதை பிரித்து கடவுளர்களாகவும் அந்த சக்தியுடன் அவதரித்தவர்களை அதிசய பிறவிகளாகவும் கருதி வணங்குபவன் இந்து. வேறெந்த மதங்களிலும் இத்தகைய வேத புராண இதிகாசங்கள் பலவித வழிபாடுகள் இல்லை. இந்து முன்னோர் உலகளாவிய தத்துவங்களை இந்துக்களிடம் புகுத்தினர். ரிஷிகளும் யோகிகளும் வானில் பறந்தனர். இயேசுவும் முகமது நபியும் அப்படியா பறந்தார்கள். இந்து மதம் ஆழ்கடல். மற்ற மதங்களில் வழிபாட்டு தலங்களை குடும்ப உறுப்பினர் மையமாக நடத்துகிறார்கள். வழிபடுபவர்களை ஒருங்கிணைத்து கட்டுப்பாட்டில் நிறுத்தும் இந்த சர்வாதிகார போக்கு இந்து ஆலயங்களிலும் கடவள்களிலும் இல்லை. அதை நிர்வகிப்பவர்களிடமும் பார்க்க முடியாது. யார் வேண்டுமானாலும் ஆலய தரிசனம் செய்யலாம். சர்ச் மசூதி அங்கத்தினர் தவிர வெளியார் யாரும் அவைகளுக்குள் நுழைய முடியாது. இதுவே உலகில் இந்துக்களின் பெருமையை தூக்கி நிறுத்துகிறது.

Rate this:
Reply

மேலும் 6 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X