பொது ஆகஸ்ட் 04,2021 | 18:40 IST
கணவருக்கு போதுமான வருவாய் இல்லாததால் குடும்பச் சுமையை சுமக்க அங்காள ஈஸ்வரி தயாரானார். கால் டாக்சி ஓட்டினார். கோவிட் பரவலால் தொடர்ந்து கால்டாக்சி ஓட்ட முடியவில்லை. கோவையைச் சேர்ந்த சாரு சிண்டிகேட் நிறுவனம், பொக்லைன் எந்திரத்தை இயக்கும் பயிற்சியை பெண்களுக்கு அளிப்பதை கேள்விப்பட்டார். பொக்லைன் ஆபரேட்டர் ஆகிவிட்டால் நல்ல வருவாய் ஈட்டலாம் என்பதை புரிந்து கொண்ட அங்காள ஈஸ்வரி, தீவிரமாக பயிற்சி எடுத்தார். கோவை ஆர்டிஓ அலுவலகத்தில் லைசென்ஸ் பெற்றார். பொக்லைன் எந்திரத்தை இயக்கும் தமிழகத்தின் முதலாவது பெண் என்ற சிறப்பை எட்டியுள்ளார்.
வாசகர் கருத்து