Advertisement

பட்ஜெட்டில் தூள் கிளப்ப திட்டம்

அரசியல் ஆகஸ்ட் 06,2021 | 17:11 IST

Share

முதல்வராக ஸ்டாலின் மே 7-ல் பதவி ஏற்றார். வரும் சுதந்திர தினம், அவர் பதவிக்கு வந்த 100 வது நாள். அன்று கோட்டையில் தேசிய கொடி ஏற்றும் வாய்ப்பு அமைந்தது அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்சிக்காரர்களும் தமிழக மக்களும் இதே போல் அந்த தேதியில் மகிழ்ச்சி அடைய வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறார். அதற்கு 2 நாள் முன்னதாக தாக்கல் ஆகும் பட்ஜெட்டில், மக்களுக்கு மகிழ்ச்சி தரும் பல திட்டங்கள் அறிவிக்கப்படும் என அறிவாலயம் வட்டாரங்கள் கூறுகின்றன. உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட அத்தனை மனுக்கள் மீதும் இன்னும் 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பேன் என தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக பிரசாரம் செய்ய பட்ஜெட்டும் 100 நாள் ஆட்சி செயல்பாடும் பெரிய மேடையாக பயன்படும் என சீனியர் அமைச்சர்கள் இருவர் நமது நிருபரிடம் நம்பிக்கை தெரிவித்தனர். குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கீடு, புதிய மாநகராட்சிகள், பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்ற திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X