பொது ஆகஸ்ட் 06,2021 | 17:13 IST
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து அமராவதியில் உள்ள ஆந்திர தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தார். ஜெகன்மோகனிடம் பதக்கத்தை காட்டி வாழ்த்து பெற்றார். விசாகப்பட்டினத்தில் விரைவில் பாட்மின்டன் அகாடமியை தொடங்கி ஆந்திராவிலிருந்து பல சிந்துக்களை உருவாக்க வேண்டும் என ஜெகன் கூறினார். வெண்கலப்பதக்கம் வென்றதற்காக சிந்துவுக்கு ஆந்திர அரசின் சார்பில் 30 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. விஜயவாடாவில் உள்ள கனக துர்கா அம்மன் கோயிலில் சிந்து சுவாமி தரிசனம் செய்தார். ஒவ்வொரு முறை போட்டியில் பங்கேற்கச் செல்லும் முன் துர்கை அம்மனை தரிசிப்பேன்; அம்மன் அருளால் பதக்கம் வென்றேன் என்றார்.
வாசகர் கருத்து