Advertisement

அவை தலைவர் பதவி அதிமுகவில் கடும் போட்டி

அரசியல் ஆகஸ்ட் 08,2021 | 13:34 IST

Share

2007 முதல் அதிமுகவின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் உடல் நலக்குறைவால் காலமானார். அடுத்த அவைத் தலைவர் குறித்த எதிர்பார்ப்பு கட்சியினரிடம் எழுந்துள்ளது. அதே நேரம் அந்த பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 1972 முதல் தற்போது வரை ஆறு பேர் அவைத் தலைவராக இருந்துள்ளனர். இந்த பதவிக்கு தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லையென்றாலும், கவுரமான பதவியாக பார்க்கபடுகிறது. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து கட்சியின் மூத்த நிர்வாகிகள்தான் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அதிமுகவில் சீனியர் தலைவர்கள் யாராவது வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தனபால், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், வரகூர் அருணாச்சலம், திருச்சி நல்லுசாமி ,தமிழ் மகன் உசேன் மற்றும் பா மோகன் ஆகியோர் தற்போது கட்சியின் நிர்வாக ரீதியில் மூத்த உறுப்பினர்களாக உள்ளனர்.இவர்களில் ஒருவர் அவைத்தலைவராக வாய்ப்பு உள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X