சிறப்பு தொகுப்புகள் ஆகஸ்ட் 10,2021 | 17:12 IST
விலங்குகள் கொடுமை தடுப்பு சட்டங்கள் குறித்து சென்னையில் டிஎஸ்பிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அட்வகேட்கள் பரந்தாமன் , மீனாட்சி சுந்தரம் , விலங்கு நல ஆர்வலர் சாய் விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விலங்கு சட்டம் குறித்து முதல் முறையாக தீவிர பயிற்சி அளிக்கப்படுவதாக டிஜிபி பிரதீப் வி பிலிப் தெரிவித்தார். விலங்குகளை சித்தரவதை செய்தால், கொன்றால் , போலீஸ் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது . முதலில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆதாரங்களுக்காக விலங்குகளை போட்டோ எடுக்க வேண்டும். ஸ்டேட்மெண்ட் வாங்கி பதிவு செய்ய வேண்டும். காயம் அடைந்த விலங்கை சிகிச்சைக்கு சேர்ப்பது முக்கியம். இறந்த விலங்கை போர்ஸ்ட் மார்டம் செய்ய அனுப்புவது குறித்து விளக்கப்பட்டது. எந்த ஐபிசியின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயிற்சி தரப்பட்டது . தெரு நாய்களுக்கு உணவு கொடுக்க யாரையும் தடை செய்ய கூடாது. ஒரு ஏரியாவில் இருக்கும் நாயை இன்னொரு ஏரியாவில் விட்டால் நடவடிக்கை. நகராட்சி ஊழியர்கள் செய்தாலும் தவறு தான் . கருத்தடை செய்ய மட்டுமே அவர்களுக்கு அனுமதி இருக்கிறது. அபார்ட்மெண்டுகளில் செல்ல பிராணிகள் வளர்க்க கூடாது என கட்டாயப்படுத்த யாருக்கும் சொல்ல உரிமை இல்லை. வித்தை காட்ட விலங்குகளை பயன்படுத்தினால் நடவடிக்கை. ஜல்லிக்கட்டு நடத்துவது, போலீசுக்கு உதவும் மோப்ப நாய்கள் பயன்படுத்துவதற்கு மட்டும் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற விஷயங்கள் குறித்து விளக்கம் தரப்பட்டது. விலங்குகள் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. விலங்குகள் சித்தரவதை பற்றிய வழக்குகளில் வழங்கிய முக்கிய தீர்ப்புகள் குறித்து மீனாட்சி முருகன் பேசினார் . முதல்வர் ஸ்டாலின் மருமகள் விலங்கு நல ஆர்வலராக கிருத்திகாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். டிஎஸ்பிக்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தா
வாசகர் கருத்து