பொது ஆகஸ்ட் 12,2021 | 16:32 IST
சமூக சேவைக்கான சென்னை கிறிஸ்தவக்குழு Madras Christian Council of Social Service நடத்தும் காப்பகம் சென்னை பெரவள்ளூரில் உள்ளது. சிறுமிகள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் என இங்கு, 130 பேர் தங்கியுள்னர். இந்த காப்பகத்தின் நிர்வாக செயலாளராக பதவி வகித்தவர் இசபெல் ரிச்சர்ட்சன் வயது 56. இவர், சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினராகவும் உள்ளார். கோவிட் ஊரடங்கு காலத்தில் தனது தம்பி பென்னட் ரிச்சர்ட்சனை காப்பகத்தில் தங்க இஸபெல் அனுமதித்தார். அவர் 15 வயது சிறுமி மற்றும் 20 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 20 வயது நிரம்பிய இளம்பெண், காப்பக நிர்வாகிகளிடம் புகார் அளித்தார். அவர்கள் விசாரணை நடத்தினர். பென்னட் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. காப்பகத்தின் நிர்வாகச் செயலாளர் பொறுப்பில் இருந்து இசபெல் நீக்கப்பட்டார். இஸபெல், பென்னட் மீது பெரவள்ளூர் மகளிர் போலீசில் காப்பக நிர்வாகிகள் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார், இஸபெல்லை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான பென்னட்டை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து