பொது ஆகஸ்ட் 13,2021 | 11:46 IST
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கி வேத பண்டிதர்கள் ஆசீர்வாதம் செய்தனர். பின்னர் பேட்டியளித்த பி.வி. சிந்து, விசாகப்பட்டினத்தில் விரைவில் பேட்மிண்டன் அகாடமி திறக்கப்பட உள்ளது.இதில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தார்.
வாசகர் கருத்து