Advertisement

பெட்ரோல் விலை குறைப்பு நள்ளிரவு அமலுக்கு வந்தது

பொது ஆகஸ்ட் 14,2021 | 07:40 IST

Share

தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 3 ரூபாய் அளவுக்கு குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அரசு கஜானாவுக்கு ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். பெட்ரோல் மீதானவரி குறைப்பு ஏழை நடுத்தர மக்களுக்குநிவாரணமாக இருக்கும் என நிதி அமைச்சர் தியாகராஜன் கூறினார். பெட்ரோல் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3.02 குறைந்து 99 ரூபாய் 47 காசுகளாகவும், டீசல் விலையில் கடந்த 31 நாட்களாக மாற்றமின்றி லிட்டருக்கு ரூ 94.39 ஆக உள்ளது. பட்ஜெட்டில், டீசல் விலை குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் இல்லாததால் சரக்கு போக்குவரத்து துறையினர்,மீனவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். #PetrolPrice #DMK #PTR #TN_Budget2021


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X