பொது ஆகஸ்ட் 15,2021 | 13:58 IST
உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சிக்கான மிகப்பெரிய திட்டம் ஒன்று விரைவில் வரப்போவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர தின உரையில் இதனை கூறினார். அனைவரது வளர்ச்சியே நமது இலக்கு. இதற்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். சாலை வசதி, மின் இணைப்பு ,காஸ் இணைப்பு மூலம் பல கோடி பேர் நன்மை பெற்றுள்ளனர் என்றார். பின்தங்கிய 110 மாவட்டங்களில் வளர்ச்சிக்கென தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். கிராமங்களில் டிஜிட்டல் தாக்கம் அதிகரித்துள்ளது. புரட்சிக்கும், புதுமைக்கும் நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். மிகபெரிய திட்டம் ஒன்று விரைவில் வர உள்ளது. வளர்சிக்கு எதிராக உள்ள தடைகற்களை தாண்டி செல்லும் வகையில் அந்த திட்டம் அமையும் என்றார் பிரதமர். போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய உள்ளோம். இது உலக அளவில் தொழில் வளர்ச்சியை வளர்ப்பதுடன் இந்தியாவை பெருமை பெற செய்யும் என மோடி கூறினார்.
வாசகர் கருத்து