Advertisement

ஆப்கன் மக்களை கைவிட மாட்டோம் ஐநா அறிவிப்பு

பொது ஆகஸ்ட் 16,2021 | 22:35 IST

Share

ஆப்கானிஸ்தான் நிலைமை பற்றி விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக இன்று கூடியது. இந்தியா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் பேசியதாவது: ஆப்கன் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மனித உரிமை மீறல்கள் கவலை அளிக்கிறது; ஆப்கன் மக்களை ஐ.நா. கைவிடாது என்றார். ஆப்கானிஸ்தானை மீண்டும் பயங்கரவாத அமைப்புகள் தங்களது புகலிடமாக பயன்படுத்தக்கூடாது; இதை உலக நாடுகள் உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். ஆப்கனில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது; ஆப்கன் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க அனைத்து நாடுகளும் ஒன்றுபட வேண்டும்; தாலிபான்கள் கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டும்; மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பளிக்க வேண்டுமெனவும் குட்டரஸ் வலியுறுத்தினார். ஆப்கனில் இருந்து வரும் மக்களை அனைத்து நாடுகளும் மனிதநேயத்துடன் அகதிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும் குட்டரஸ் வேண்டுகோள் விடுத்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X