பொது செப்டம்பர் 01,2021 | 19:48 IST
கோவையில் உள்ள தனியார் கல்லூரியின் முதல்வராக இருப்பவர் பாதிரியார் டேவிட். விநாயகர் சதூர்த்தியன்று கிறிஸ்தவர்கள் ஜெபயாத்திரை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினார். இது சோசியல் மீடியாவில் பதிவு செய்யப்பட்டது . இது இந்து முன்னணி நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது . நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் துடியலூர் காவல்நிலையத்தை இன்று முற்றுகையிட்டனர். மத கலவரத்தை தூண்டும் பாதிரியார் டேவிட்டை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்தனர்.
வாசகர் கருத்து