அரசியல் செப்டம்பர் 02,2021 | 12:08 IST
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் வவுச்சர் ஊழியர்களாக 1311 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இவர்களுக்கு மாதத்தில் 16 நாட்கள் மட்டுமே வேலை. மாதம் ரூ.3200 சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. . ஊதிய உயர்வு , கூடுதல் நாட்கள் வேலை என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களது கோரிக்கைகளை ஏற்று , வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும், மாதத்தில் 26 நாட்கள் பணி என ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார். மகிழ்ச்சி அடைந்த ஊழியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர் ரங்கசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் அவரது பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
வாசகர் கருத்து