பொது செப்டம்பர் 02,2021 | 00:00 IST
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு கொள்ளை விளக்க குறிப்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைப்பதில் உள்ள பாதிப்புகளை ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் கல்வியாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து செயல்படுத்த தலைமை செயலர் தலைமையில் உயர் அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, மருத்துவ படிப்புக்கான சேர்க்கையின் நீட் தேர்வை புறந்தள்ளுவதற்கு, புதிய சட்டத்தை இயற்ற ஜனாதிபதியின் ஒப்புதல் பெறலாம் என பரிந்துரைத்துள்ளது. மருத்துவ கல்வி சேர்க்கையில் பாகுபாடு காட்டப்படுவதால், பாதிக்கப்படும் மாணவகளுக்கு சமூக நீதியை உறுதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து