பொது செப்டம்பர் 02,2021 | 20:37 IST
நாட்டில் கொரோனா அலை இன்னும் முடியவில்லை என்று மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார். நாட்டின் ஒட்டுமொத்த தொற்று பாதிப்பில் 69 சதவீதம் கேரளாவில் பதிவாகிறது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிராவில்தான் அதிகளவில் கோவிட் நோயாளிகள் உள்ளனர். இந்த மாநிலங்களில் 10 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் வரை நோயாளிகள் உள்ளனர். அதிலும், கேரளாவில் 1 லட்சத்தையும் தாண்டிவிட்டது. ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது, ஆகஸ்டில் இருந்து பாதிப்பு குறைந்து வருகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 59.29 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. கடந்த மாதத்தின் கடைசி வாரத்தில் 80 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன. நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 16 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர். 54 சதவீதம் பேர் முதல் டோஸ் மட்டும் செலுத்தி கொண்டுள்ளனர். சிக்கிம், இமாச்சலில் 100 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார செயலர் ராஜேஷ் தெரிவித்தார்.
வாசகர் கருத்து