Advertisement

பொறுமையை சோதிக்காதீர் மத்திய அரசுக்கு சுப்ரீ்ம் கோர்ட் எச்சரிக்கை

பொது செப்டம்பர் 06,2021 | 18:43 IST

Share

நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இது, தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி ரமணா, மத்திய அரசு மீது, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். பரிந்துரைகள் அளிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டாகியும் பணியிடங்களை ஏன் இன்னும் நிரப்பவில்லை? என்று கேட்டார். சுப்ரீம் கோர்ட் அளிக்கும் தீர்ப்புகள், உத்தரவுகளை மத்திய அரசு மதிப்பதே இல்லை. எங்களது பொறுமையை சோதிக்காதீர்கள். தீர்ப்பாயங்களை நடத்த விருப்பம் இல்லை என்றால், சட்டங்களை ரத்து செய்துவிடுங்கள் என்றார். வரும் 13ம் தேதிதான் இறுதி கால அவகாசம். அதற்குள் தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அந்த பணியை சுப்ரீம் கோர்ட்டே செய்ய நேரிடும் எனவும் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X