Advertisement

ஈரோடு_பழனிக்கு தாராபுரம் வழியாக அகல ரயில் திட்டம் முருகன் வலியுறுத்தல்

அரசியல் செப்டம்பர் 07,2021 | 16:50 IST

Share

மத்திய இணை அமைச்சர் முருகன் டில்லியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்தார். ஈரோட்டில் இருந்து -பழனிக்கு தாராபுரம் வழியாக அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகன் வலியுறுத்தினார். இதன்மூலம் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகப்பெரிய வளர்ச்சி பெறும் என்றார். புண்ணிய ஸ்தலங்களை இணைக்கும் வகையில் வாரணாசியில் இருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேஸ்வரத்துக்கு விரைவு ரயிலை இயக்க வேண்டுமெனவும் முருகன் கோரிக்கை வைத்தார். இதன்மூலம் பாரம்பரிய நகரான காஞ்சிபுரம் பெரிய சுற்றுலா நகராக வளர்ச்சி பெறும் எனவும் விளக்கி கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X