விளையாட்டு செப்டம்பர் 08,2021 | 07:00 IST
அமெரிக்காவின் நியூயார்க்கில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீரர், செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் புரூக்ஸ்பையை எதிர்கொண்டார். முதல் செட்டை 1-6 என இழந்தார் ஜோகோவிச். பின் சுதாரித்துக் கொண்ட இவர் அடுத்த மூன்று செட்களையும் 6-3, 6-2, 6-2 என எளிதாக கைப்பற்றினார். முடிவில் ஜோகோவிச் 1-6, 6-3, 6-2, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
வாசகர் கருத்து