Advertisement

இலங்கையில் அவசர நிலை! உணவு பஞ்சம் ஏற்பட காரணம்? | Sri lanka food emergency

சிறப்பு தொகுப்புகள் செப்டம்பர் 07,2021 | 21:00 IST

Share

இலங்கையில் உள்ள அத்யாவசிய கடைகளில் மக்கள் குவிந்துள்ளனர். 3 கிலோ சர்க்கரை வாங்க சென்றவருக்கு அரை கிலோ சர்க்கரை தான் தரப்படுகிறது . ஒரு குடோனில் பதுக்கப்பட்ட 32 ஆயிரம் டன் சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது . மக்களுக்கு சம்பளத்தை விட செலவு தான் அதிகம் ஆகிறது . அரிசி, உருளை கிழங்கு உள்ளிட்ட உணவு பொருட்கள் ,மருந்து , எரிபொருள் , விவசாயத்துக்கு தேவையான உரம் போன்றவற்றின் விலை கிடுகிடுவென எகிறியுள்ளது . இலங்கையில் ஏன் இந்த நிலைமை ? கோவிட் காரணமாக இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பலர் வேலை இழந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 40 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 ஆயிரத்துக்கும் குறைவான சுற்றுலா பயணிகள் தான் இலங்கைக்கு சென்றுள்ளனர் . அரசின் வருமானம் பெரும்பாலும் சுற்றுலாவை நம்பி இருப்பதால் இப்போது நிதி பற்றாக்குறை ஏற்றப்படுள்ளது . வேறு காரணங்களும் இருக்கிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X