Advertisement

இன்ஸ் வசந்தி போலீஸ்துறைக்கே களங்கம் ஐகோர்ட் கண்டனம் | Inspector vasanthi

சம்பவம் செப்டம்பர் 07,2021 | 21:23 IST

Share

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த டெய்லர் அர்ஷத் தொழில் தொடங்க 10 லட்ச ரூபாய் கடன் வாங்கினார். பணத்துடன் மதுரை நாகமலைபுதுக்கோட்டைக்கு கடந்த ஜூலை மாதம் வந்தார். அர்ஷத்தின் நண்பர் மூலம் இந்த விஷயத்தை அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, அர்ஷத்தை மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு விரட்டினார். விவகாரம் விஸ்வரூபம் ஆனதை அடுத்து, வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நீலகிரியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. 'வியாபாரியிடம் பணம் பறித்த இன்ஸ்பெக்டர் வசந்தியால் காவல்துறைக்கே களங்கம் என நீதிபதி கூறினார். போலீசாரே குற்ற செயல்களில் ஈடுபடுவதால் சாதாரண மக்கள், காவல்துறை மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை உள்ளது; யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு காவல்துறை ஏற்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி கூறினார். வசந்தி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற நீதிபதி அனுமதி வழங்கினார்.


வாசகர் கருத்து (4) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Baskaran
Baskaran , இந்தியா. 09-செப்-2021 | 22:41:35 IST Report Abuse

இன்ஸ் போலாம் இன்னும் எத்தனை இன்ஸ் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

Rate this:
Reply

மேலும் 3 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X