Advertisement

போலீசாருக்கு 8 மணி நேர டூட்டி கோர்ட் உத்தரவு

பொது செப்டம்பர் 10,2021 | 17:32 IST

Share

கரூரை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் மாசிலாமணி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்தார். தமிழக காவல்துறையில் காலி பணியிடங்களை நிரப்புதல், ஊதிய உயர்வு, பணிச்சுமை தொடர்பாக அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கில், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் தீர்ப்பளித்தனர். போலீசாருக்கு 8 மணிநேர வேலை, 3 ஷிப்ட் முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மற்ற அரசு ஊழியர்களைவிட போலீசாருக்கு 10 சதவீதம் கூடுதல் ஊதியம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். போலீசாரின் குறைகளை நிவர்த்தி செய்ய ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் 3 மாதத்தில் காவலர் ஆணையம் அமைக்க வேண்டும். மனநல நிபுணர், உளவியலாளர், போலீசார், வழக்கறிஞர், சமூக ஆர்வலர்கள் ஆணையத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். காவலர்களின் வேலை பளு, மன அழுத்தம், மன உளைச்சலை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Ramesh Sargam
Ramesh Sargam , இந்தியா. 10-செப்-2021 | 19:28:56 IST Report Abuse

கோர்ட் தீர்ப்பை நான் முழுவதும் வரவேட்கிறேன். அவர்களும் மனிதர்கள். அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன. என்றோ நடக்கவேண்டியது. இப்பவாவது நடந்ததே என்று சந்தோஷ படுகிறேன்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X