Advertisement

உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி

பொது செப்டம்பர் 15,2021 | 05:08 IST

Share

அடுத்த மாதம் 9 மாவட்டங்களில் நடக்கவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியா, கூட்டணியா? என்பது குறித்து முடிவெடுக்க பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகித்தனர். கட்சியின் வளர்ச்சி கருதி தனித்து போட்டியிடலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என கட்சித் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார். தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து 15,16 தேதிகளில் விருப்ப மனுக்கள் பெறப்படும் எனவும் மணி கூறினார்


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Narayanan
Narayanan , இந்தியா. 15-செப்-2021 | 06:28:42 IST Report Abuse

இனிவரும் எல்லா தேர்தலிலும் தனித்தே நில்லுங்கள் . இனி வேறு கட்சி வாசலில் நின்றால் நீங்கள் கடைந்தெடுத்த அயோக்கியன் என்ற பட்டப்பெயர் வந்துவிடும் .

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X