Advertisement

பழைய இரும்பில் உருவான மோடி சிலை

பொது செப்டம்பர் 15,2021 | 05:10 IST

Share

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ராவ். மகன் ரவிச்சந்திரனுடன் சேர்ந்து சூர்யா சிற்பக்கலை கூடம் நடத்தி வருகிறார். பல தலைவர்களின் சிலையை தத்ரூபமாக தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். 75 ஆயிரம் போல்ட் நெட்டுகளை பயன்படுத்தி மகாத்மா காந்தி சிலையை செய்தனர். இதைப் பார்த்த பெங்களூரு கவுன்சிலர் மோகன் ராஜு, பிரதமர் மோடியின் சிலையை இதேபோல தயார் செய்து தரும்படி கேட்டார். இதையடுத்து, வெங்கடேஸ்வர ராவும், அவர் மகன் ரவிச்சந்திரனும் மெக்கானிக் ெஷட்டுகளில் பயன்படாமல் கிடக்கும் போல்ட், நெட், ராடுகள், கார், பைக்கின் வீல்கள் மற்றும் உதிரி பாகங்களை வாங்கி வந்து மோடி சிலையை தயாரித்துள்ளனர். 14 அடி உயரம், 2 டன் எடை கொண்ட அந்தச் சிலையை உருவாக்க கிட்டத்தட்ட 2 மாதம் ஆனதாக வெங்கடேஸ்வர ராவ் கூறினார். சிலை தயாரிப்புப் பணியில் தந்தை, மகனுக்கு உதவியாக, 10 பேர் இருந்துள்ளனர். பெங்களூருவுக்கு 16ம்தேதி சிலை கொண்டு செல்லப்படவுள்ளது. அங்குள்ள பூங்காவில் மோடி சிலையை நிர்மாணிக்க உள்ளதாக கவுன்சிலர் மோகன் ராஜு தெரிவித்தார்.


வாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

ganesha
ganesha , இந்தியா. 15-செப்-2021 | 13:23:14 IST Report Abuse

இரும்பு மனிதர் என்பது சரி

Rate this:
Reply

மேலும் 2 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X