Advertisement

பிரதமர் மோடி 5 லட்சம் அனுப்பினாரா? பீகார் கலகல

சிறப்பு தொகுப்புகள் செப்டம்பர் 16,2021 | 11:34 IST

Share

பீகார்ல பக்தியாபூர்னு ஒரு கிராமம். அங்க ரஞ்சித் தாஸ்னு ஒருத்தர். போன வாரம் அவரோட பேங்க் அக்கவுன்ட்ல அஞ்சு லட்சம் ரூபா வரவு ஆகி இருந்துது. தாஸ் ரொம்ப குஷி ஆயிட்டார். மூணு நாள் கழிச்சு பேங்க் ஆபிசர் வந்தார். “தாஸ், ஒரு தப்பு நடந்து போச்சு. வேற ஒரு நம்பருக்கு போக வேண்டிய பணம் உங்க கணக்குல சேந்திருச்சு. அத திருப்பி தரணும்”னு ஆபீசர் கேட்டார். தாஸ் அட்டகாசமா சிரிச்சார். “அது பிரதமர் மோடி எனக்கு அனுப்புன பணம். பதினஞ்சு லட்சம் தர்றதா சொன்னதுல மொத தவணையா அஞ்சு அனுப்பிருக்கார். அத ஆட்டய போட பாக்றீங்களா..? நா ஒண்னும் ஏமாளி இல்ல” அப்டீனு சொன்னார். ஆபிசர் எவ்வளவோ சொல்லியும் தாஸ் மசியல. பேங்க் மேனேஜர் புகார் குடுத்தார். தாச போலீஸ் கைது செஞ்சு ஜெயில்ல போட்ருக்காங்க. தாஸ் கையெழுத்து இல்லாம அஞ்சு லட்சத்த எப்டி ரெகவர் பண்றதுனு பேங்க்ல மீட்டிங் நடக்குது. அது ரொம்ப கஷ்டம். ஏன்னா, ஆபிசர் வரதுக்கு முன்னாடியே அஞ்சு லட்சத்தயும் காலி பண்ணிட்டார். இப்ப அவர் அக்கவுன்ட்ல மினிமம் பேலன்ஸ் கூட இல்ல.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X