Advertisement

வீரமணி வீட்டில் ரெய்டு பழிவாங்கும் படலம்!

அரசியல் செப்டம்பர் 16,2021 | 20:05 IST

Share

வீரமணி வீட்டில் ரெய்டு பழிவாங்கும் படலம்! அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை முன்னாள் வணிக வரி அமைச்சர் வீரமணி தொடர்பான இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தியதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம். உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் கபட நாடகம் என்று அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்துள்ளனர். அவர்களது கூட்டறிக்கையில், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு, மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளது. அதை மாற்றவே, அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் மீது, பொய் வழக்கு போட்டு இடையூறு செய்கிறார்கள் என்று கூறியுள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு தோல்வி ஏற்படும் என்ற சந்தேகம் உள்ள மாவட்டங்களில், அதிமுகவினரை செயல்பட விடாமல் தடுக்கும் வகையில், வீரமணி வீட்டில் ரெய்டு நடத்தியிருப்பது, பழிவாங்கும் படலம். இந்த சலசலப்பு, பயமுறுத்தல்களுக்கு அதிமுக அடிபணியாது. சட்டபடி எதிர்கொள்வோம் என்று ஓபிஎஸ் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X