பொது செப்டம்பர் 17,2021 | 14:00 IST
அதிமுக ஆட்சியின் போது வணிக வரித்துறை அமைச்சராக இருந்த வீரமணி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார், வீரமணியின் வீடு, அலுவலகம், உறவினர்கள், நண்பர்கள் வீடு என 35 இடங்களில் நடத்தினர். ஜோலார்பேட்டையிலுள்ள வீரமணி வீட்டில் இரவு 11.15 மணிக்கு ரெய்டு முடிந்தது. இதில் 47 கிராம் வைரம், 623 பவுன் தங்க நகைகள், 7.2 கிலோ வெள்ளி பொருட்கள், 35 லட்சம் ரூபாய் ரொக்கம், 1.80 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டன. ரோல்ஸ்ராய்ஸ் உள்ளிட்ட 9 சொகுசு கார்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், 5 ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்டவைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வீட்டு வளாகத்தில் பதுக்கி வைத்திருந்ததாக 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள 275 யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள், உறவினர்கள் வீடுகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ரெய்டு முடிந்து பேசிய வீரமணி, உள்ளாட்சி தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்த, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எந்த வழக்கு தொடுத்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றார்.
வாசகர் கருத்து