பொது செப்டம்பர் 19,2021 | 09:49 IST
தமிழகத்தில் கடந்த 12ம் தேதி மெகாதடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. 28 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மீண்டும் 17 ம் தேதி தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் போதிய தடுப்பூசி இல்லாததால் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி இன்று மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. 20 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் 15 லட்சம் தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. காலை 7 முதல் இரவு 7 மணி வரை முகாம் நடக்கும். கோவை பொள்ளாச்சியில் மெகா தடுப்பூசி முகாமை சுகாதார அமைச்சர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். இதையடுத்து பேசிய அவர், கேரளாவில் கோவிட் அதிகமாக இருப்பதால், எல்லைப்பகுதியில் அதிக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
வாசகர் கருத்து