Advertisement

170 கி.மீ வேகத்தில் காரில் பறந்த மத்திய அமைச்சர்

பொது செப்டம்பர் 19,2021 | 22:24 IST

Share

டெல்லி மும்பை நகரங்களை இணைக்கும் எக்ஸ்ப்ரஸ்வே என்கிற அதிவேக சாலை ரெடியாகி வருகிறது. வேலைகள் நடப்பதை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பார்வையிட்டார். அமைச்சர் சென்ற கியா கார்னிவல் காரின் ஸ்பீடாமீட்டர் ஒரு கட்டத்தில் 170 கிலோ மீட்டர் வேகத்தை காட்டியது. சட்டப்படி உச்ச வேகம் 120 கி.மீ. இந்த சாலை ஒரு லட்சம் கோடி ரூபாயில் தயார் ஆகிறது. 12 லேன்கள் இருக்கும். தூரம் 1,359 கி.மீ. இந்தியாவில் மட்டும் அல்ல, உலகிலேயே மிக நீளமான எக்ஸ்ப்ரஸ்வே இதுதான் என்கிறார் நிதின். மனிதர்களோ விலங்குகளோ சாலைக்குள் நுழையாமல் தடுக்க இரு புறமும் 6 அடி உயர சுவர் கட்டப்படும். அடுத்த ஆண்டு வேலை முடிந்து 2023 ஜனவரியில் திறக்கப்படும்.. இப்போது மும்பை டெல்லி பயண நேரம் 25 மணி. இந்த சாலை ரெடியானதும் 12 மணி நேரத்தில் போய் விடலாம். டோல் கட்டணமாக மாதம் 1000 கோடி கிடைக்கும் என்றார் அமைச்சர்.


வாசகர் கருத்து (6) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

அப்புசாமி
அப்புசாமி , . 20-செப்-2021 | 10:31:42 IST Report Abuse

இவுரு பறக்கும் போது ரோடுல ஈ, காக்கில்லாம பாத்துப்பாய்ங்க. அடிபடாம போயிடுவாரு. அகில உலகத்திலிருந்து ஆத்மநிர்பரா கீழே தகர டப்பா கார்களை தயாரிச்சு வித்துக்கிட்டிருக்காங்க. ஆயிரக்கணக்கில் கார்கள் பறக்கும்போது உரசினாலே அப்பளமாயிரும்

Rate this:
Reply

மேலும் 5 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X