Advertisement

100 கிலோ மாவா பதுக்கல் கொடுங்கையூர் ரவுடிகள் கைது

சம்பவம் செப்டம்பர் 24,2021 | 11:24 IST

Share

குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் சிறையில் இருந்து ரிலீஸ் ஆனதும் , அவர்களை போலீசார் கண்காணிப்பது வழக்கம் . அவ்வபோது அவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்துவர். சென்னை கொடுங்கையூரில் போலீசார் திடீர் சோதனை செய்தனர். கண்ணதாசன் நகரில் ஒரு வீட்டில் மாவா பொட்டலங்கள் இருந்தது. குடியிருந்த 45 வயது காளியப்பன் , மனைவி உஷாவை கைது செய்தனர். இதில் தொடர்புடைய வெற்றி , கெளதம் , செல்வகுமார், மணி உள்ளிட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். கிட்டத்தட்ட 70 வீடுகளில் சோதனை நடந்தது. 100 கிலோ மாவா, 25 கத்தி , அரிவாள் , 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் . கைதானவர்களிடம் விசாரணை நடக்கிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X