Advertisement

சோனியா, ராகுல் அதிர்ச்சி

அரசியல் செப்டம்பர் 28,2021 | 18:15 IST

Share

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். சித்துவுக்கு முக்கியத்துவம் அதிகரித்ததால் முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். சித்துவின் ஆதரவாளர் சரண்ஜித்சிங் சன்னி புதிய முதல்வரானார். இதனிடையே, பதவி விலகிய அமரீந்தர் சிங் அமித் ஷா, நட்டாவை சந்தித்து பாஜவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால் பஞ்சாப் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து திடீரென ராஜினாமா செய்தார். பஞ்சாப் மக்களின் நலன்; எதிர்காலம்தான் முக்கியம்; அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை; அதனால் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன் என, சோனியாவுக்கு சித்து கடிதம் அனுப்பினார். பஞ்சாபில் 2 தினங்களுக்கு முன், 15 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அமரீந்தர் சிங்குக்கு ஆதரவாக இருந்த சில முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டதால் சித்து அதிருப்தி அடைந்தார். அவர்களில் ஓரிருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பது பற்றி மேலிடத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றார். அதை மேலிடம் கண்டுகொள்ளாததால் சித்து ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் சட்டபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சித்துவின் ராஜினாமாவால் சோனியா, ராகுல், பிரியங்கா அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

பச்சையப்பன் கோபால் புரம்
பச்சையப்பன் கோபால் புரம் , . 28-செப்-2021 | 18:52:46 IST Report Abuse

ஆம்!( பிரதமர் பதவி இவ்வளவு விரைவில் தேடி வரும் என எதிர்பார்க்க வில்லை.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X