பொது செப்டம்பர் 30,2021 | 11:03 IST
நேற்று சேலம் சென்ற முதல்வர் ஸ்டாலின் , நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இரவு காரில் தர்மபுரி கிளம்பினார். அதியமான் கோட்டையில் கூடியிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். ஊரின் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஸ்டாலின் திடீரென விசிட் செய்தார். எஸ்ஐ யின் இருக்கையில் அமர்ந்து, ஸ்டேஷனுக்கு வந்த புகார்களை படித்தார். நடவடிக்கை குறித்தும் , போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்தார். சுமார் பத்து நிமிடத்துக்கு பின் அங்கிருந்து கிளம்பினார்.
வாசகர் கருத்து