Advertisement

ரூ.500 கோடி அரசு நிலம் ஆக்கிரமிப்பு 5 பேர் கைது

பொது அக்டோபர் 03,2021 | 16:30 IST

Share

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற விஏஓ கணேஷ்பிள்ளை. திருப்பதி அருகே உள்ள அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் 50 லட்ச ரூபாய்க்கு விற்க முயன்றார். மகன்கள் மதுசூதன், ராஜன் ஆகியோர் அதற்கு உடந்தையாக இருந்தனர். 5 லட்சம் முன்பணம் கொடுத்து வாங்க வந்த நபர், போலி ஆவணம் என தெரிந்து, போலீசில் புகார் அளித்தார். சிஐடி பிரிவு போலீசார் விசாரித்ததில், சித்தூர் மாவட்டத்தில் உள்ள 2,320 ஏக்கர் அரசு நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் ஆக்ரமித்து இருந்தது தெரியவந்தது. 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. கணேஷ், அவரது மகன்கள், உறவின பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கணேஷனின் மகளை தரணியை தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X