Advertisement

பாகிஸ்தானை தனிமைப்படுத்தினால் நடக்கும் நன்மை

பொது அக்டோபர் 08,2021 | 14:28 IST

Share

பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும்; என அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் H. R. McMaster பார்லிமென்ட் குழுவில் கூறினார். ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியது பற்றி பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆப்கன் மக்கள் அடிமை சங்கிலியை அறுத்து எறிந்து விட்டார்கள் என்றார். அதை சுட்டிக் காட்டி மெக் மாஸ்டர் கூறுகையில், தலிபான்களை வெளிப்படையாக ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதற்காக நாம் நிதியுதவி வழங்க வேண்டும்? என கேட்டார். மனிதநேய அடிப்படையில் ஆப்கன் மக்களின் நலனுக்காக நிதி வழங்கினால் அது அவர்களுக்கு கிடைக்காது, ஆயுதங்களை குவிக்க தான் நிதியை தலிபான்கள் பயன்படுத்துவார்கள். அது அச்சுறுத்தலாக மாறும். வேறு வழிகளில் உதவ அமெரிக்கா ஆராய வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X