Advertisement

புரட்டாசியிலும் மீன் விலை 15% உயர்வு

பொது அக்டோபர் 11,2021 | 15:36 IST

Share

புரட்டாசி மாதம் பெரும்பாலான மக்கள் விரதம் இருந்து அசைவ உணவை தவிர்ப்பதால், மீன்கள் விலை குறைவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு விலை உயர்ந்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக, புரட்டாசியில் அதிக மழை பெய்து வருகிறது. மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டதால், வரத்து குறைந்து விட்டது. கூடவே, டீசல் விலையும் உயர்ந்ததால், மீன்கள் விலை 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. காசிமேடு மீன் மார்க்கெட்டில், ஒரு கிலோ வஞ்சிரம் 700 முதல் 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சங்கரா, நண்டு 300 ரூபாய்க்கும், இறால் 300 முதல் 500 ரூபாய் கருப்பு வவ்வால் 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. புரட்டாசி முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. அதன் பிறகு மீன்களின் விலை இரு மடங்காக உயரலாம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X