Advertisement

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நிறுத்த ஐகோர்ட் உத்தரவு

அரசியல் அக்டோபர் 11,2021 | 17:23 IST

Share

உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை திரும்ப பெற்ற புதுச்சேரி அரசின் முடிவை எதிர்த்து எதிர்கட்சி தலைவர் சிவா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் மகாதேவன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட், தேர்தல் அறிவிப்பை திரும்ப பெற மட்டும்தான் உத்தரவிட்டது. இட ஒதுக்கீட்டை திரும்பபெற அனுமதி அளிக்கவில்லை என்று மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிட்டார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மக்கள் தொகை குறித்த புள்ளிவிவரங்கள் ஏதும் இல்லை என்பதால் இட ஒதுக்கீடு திரும்ப பெறப்பட்டதாக அரசு மற்றும் தேர்தல் ஆணைய வக்கீல்கள் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்யதான் அனுமதி அளிக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டை திரும்ப பெற்றது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். அரசியல் சட்ட விதிகளை பின்பற்றாததால், உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை 21ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X