Advertisement

தசரா ஊர்வலத்தில் புகுந்த கார் 4 பக்தர்கள் பலி

பொது அக்டோபர் 15,2021 | 21:55 IST

Share

சத்தீஷ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் தசரா பண்டிகையையொட்டி துர்கை சிலை ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திடீரென அசுர வேகத்தில் வந்த ஒரு கார் பக்தர்கள் கூட்டத்துக்குள் பாய்ந்தது. பலர் தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 20 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மேலும் 3 பேர் இறந்தனர். காரை மக்கள் விரட்டி பிடித்தனர். போதையில் இருந்த கார் டிரைவர் மற்றும் நண்பரை போலீசார் கைது செய்தனர். காரில் இருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Mani . V
Mani . V , சிங்கப்பூர். 16-அக்-2021 | 05:12:39 IST Report Abuse

அந்த காரை ஓட்டி வந்தவனை காரை ஏற்றியே கொல்ல வேண்டும்.

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X