Advertisement

முதுகலை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

பொது அக்டோபர் 18,2021 | 20:38 IST

Share

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், அரசு வேலைக்கான தகுதி தேர்வு (TEACHERS RECRUITMENT BOARD) வயது வரம்பு 40 என நிர்ணயித்து முந்தைய அதிமுக அரசு, கடந்தாண்டு ஜனவரியில் அரசாணை வெளியிட்டது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அதிமுக கொண்டு வந்த அரசாணை, ஆசிரியர்களின் வாழ்க்கையை இருளில் மூழ்க செய்யும். திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த அரசாணை ரத்து செய்யப்படும், என உறுதியளித்தார். ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகியும் அரசாணை ரத்து செய்யவில்லை. இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருப்பதாக, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசாணையை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X