Advertisement

ஜாமின் கிடைத்தும் வெளிவர முடியாமல் சிவசங்கர் தவிப்பு | Sivasankar Baba | Release | Dinamalar

பொது அக்டோபர் 27,2021 | 13:28 IST

Share

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியில் படித்த போது, பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் சிவகங்கர் பாபா மீது புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது . முதல் கட்டத்தில் மாநில அரசு விசாரித்தது. அதன் பின் சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்பட்டது. போலீஸ் தேடுவதை அறிந்த சிவசங்கர் டெல்லியில் தலைமறைவு ஆகினார். கடந்த ஜூன் 16ல் அவரை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போக்சோ மற்றும் முதன்மை நீதிமன்றங்களில் , 2 போக்சோ வழக்கில் ஜாமீன் கேட்டார் சிவசங்கர்.தள்ளுபடி செய்யப்பட்டது. சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 300 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். பெண்ணை மானபங்கம் செய்தது உள்ளிட்ட 2 வழக்குகளும் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது தொடர்பாக கடந்த வெள்ளியன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் ஆஜர் ஆகினார். நவம்பர் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போடப்பட்ட 2 மற்றும் 3வது போக்சோ வழக்குகளுக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீன் கிடைத்தும் , மற்ற வழக்குகளில் சிறையில் இருக்க வேண்டிய நிலையில் சிவசங்கர் உள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X