Advertisement

10 கோடி பேர் 2வது டோஸ் போடவில்லை

பொது அக்டோபர் 28,2021 | 05:50 IST

Share

தடுப்பூசி போடும் பணிகளை விரைவுப்படுத்துவது பற்றி மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா டில்லியில் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு அவர் கூறுகையில், இந்தியாவில் 104 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார். 18 வயதை தாண்டிய 77 சதவீதம் பேர் முதல் டோஸ் போட்டுள்ளனர். 32 சதவீதம் பேர் 2 டோஸ் போட்டுள்ளனர். ஆனால் 10 கோடி பேர் 2வது டோஸ் தடுப்பூசியை போடாமல் உள்ளனர். அவர்கள் உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார். அடுத்த மாதம் முழுவதும் வீடுவீடாக சென்று சுகாதாரப் பணியாளர்கள் 2வது டோஸ் போடாதவர்களுக்கு தடுப்பூசி போடவுள்ளனர். இதற்காக மெகா தடுப்பூசி முகாம்கள் நாடு முழுக்க நடத்தப்படவுள்ளன. முதல் டோஸ் போடாதவர்களுக்கும் அப்போது தடுப்பூசி போடப்படும் என மன்சுக் மாண்டவியா கூறினார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

S.Baliah Seer
S.Baliah Seer , இந்தியா. 28-அக்-2021 | 10:51:05 IST Report Abuse

யாரையும் எதற்கும், தடுப்பூசி உட்பட கட்டாயப்படுத்துவது தவறாகும்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X