சம்பவம் நவம்பர் 03,2021 | 22:00 IST
பெண் அதிகாரி வீட்டில் ரெய்டு ரூ.1.25 கோடி ரொக்கம் சிக்கியது வேலூரில் மண்டல தொழில்நுட்ப கல்வி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. செயற்பொறியாளராக ஷோபனா வயது 57 உள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரிகளில் புதிய கட்டடம் கட்ட ஒப்புதல் வழங்குவது ேஷாபனாதான். தீபாவளியையொட்டி கட்டட ஒப்பந்ததாரர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்து. போலீசார் அவரது காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் 5 லட்ச ரூபாய் இருந்தது. அதற்குரிய ஆவணம் இல்லாததால் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, வேலூரில் உள்ள ஷோபனா வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 15.85 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஷோபனாவின் சொந்த ஊரான ஓசூரில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 1 கோடி ரூபாய் சிக்கியது. அதற்கும் அவரிடம் கணக்கு ஏதும் இல்லை. ேஷாபனாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து