சம்பவம் நவம்பர் 06,2021 | 09:37 IST
அரசு வேலை வாங்கி தருவதாக, மோசடி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆப்ரேஷன் ஜாப் ஸ்கேம் மூலம் தேடுதல் வேட்டை நடந்தது. தமிழகம் முழுவதும் நடந்த விசாரணையில் , 58 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் சென்னையை சேர்ந்த 12 பேர் உட்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பலர் வங்கி , ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று ஏமாற்றியது தெரிந்தது. முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியனின் உதவியாளர் தஞ்சை சேர்ந்த சேஷாத்திரி, முன்னாள் எம்எல்ஏ இளம்வழுதியின் மூன்றாவது மனைவி ராணி எலிசபத் உள்ளிட்டோர் கைதனாவர் லிஸ்டில் உள்ளனர். இது போன்ற மோசடி புகார் அளிக்க, பொதுமக்கள் குறைதீர்ப்பு எண் 2345 2380 க்கு தொடர்பு கொள்ளலாம்.
வாசகர் கருத்து