அரசியல் நவம்பர் 07,2021 | 17:08 IST
சென்னையில் பெய்த கனமழையால் நகரின் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். ஓரிரு நாள் மழைக்கே இப்படி என்றால், இனி வரும் நாட்கள் எப்படி இருக்குமோ? என்று அதிமுகவின் ஓபிஎஸ் இபிஎஸ் கவலை தெரிவித்துள்ளனர். அவர்களது அறிக்கையில், மழை தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் ஆய்வு கூட்டங்கள் நடத்தினார். ஆனால், சென்னையின் இப்போதைய நிலையை பார்த்தால், முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் காகிதத்தோடு நின்றுவிட்டதோ? என்ற சந்தேகம் எழுகிறது என குறிப்பிட்டுள்ளனர். பக்கத்து மாநிலங்களில் ஏற்பட்ட மழை பாதிப்பை பார்த்த பிறகாவது, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நீர்வழித்தடங்கள் மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அரசு இயந்திரம் விரைந்து செயல்பட வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து