சம்பவம் நவம்பர் 16,2021 | 20:07 IST
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆனக்கல் வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம், யானைகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க தனியார் தோட்டங்களில் மின் வேலி அமைத்துள்ளனர். அங்குள்ள தோட்டத்துக்குள் யானைகூட்டம் புகுந்தபோது 3 வயது குட்டி யானை ஷாக் அடித்து இறந்து போனது. தாய் யானை .தனது குட்டியை கண்ணீருடன் சுற்றி சுற்றி வந்தது. இதைப் பார்த்து கண்கலங்கிய தொழிலாளர்கள் வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினருடன் வந்த கால்நடை டாக்டர்கள் யானையை பிரேத பரிசோதனை செய்தனர். காட்டில் யானை அடக்கம் செய்யப்பட்டது. தோட்ட உரிமையாளர் ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வாசகர் கருத்து