Advertisement

ஆந்திராவில் மழைக்கு 29 பேர் பலி | Andhra Flood | Andhra Rain 29 Death | Dinamalar

சம்பவம் நவம்பர் 21,2021 | 06:11 IST

Share

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. அனந்தப்பூர், கடப்பா, சித்தூரில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழையால் 29 பேர் பலியானதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 60 பேரின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X