சிறப்பு தொகுப்புகள் நவம்பர் 23,2021 | 15:07 IST
தமிழகத்தில், சென்னைக்கு அடுத்து 2வது மிகப்பெரிய சர்வதேச ஏர்போர்ட் கோவையில் இருக்கிறது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பல விவிஐக்களும் ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்லும் இந்த ஏர்போர்ட்டின் பின்பக்கம் குப்பை கிடங்காக மாறி வருகிறது. ஏர்போர்ட்டை ஒட்டியுள்ள அரசு காலி இடத்தில் தொழிற்சாலை கழிவுகள், மருத்துவம் மற்றும் இறைச்சி கழிகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு வருகின்றன. இறைச்சி கழிவுகளை உண்ண வரும் பறவைகளால், விமானங்கள் பறப்பதற்கு பல நேரங்களில் இடையூறு ஏற்படுகிறது. தீயிட்டு எரித்தாலும் புகைமூட்டத்தாலும் பாதிப்பு ஏற்படுகிறது. ஏர்போர்ட்டை ஒட்டி குவியும் குப்பைகளால் ஏற்படபோகும் ஆபத்தை அதிகாரிகள் உணரவில்லை என்கிறார் மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன். கோவையில் குப்பை மோலாண்மை சரியில்லை என்று பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தவர் இவர்...
வாசகர் கருத்து