பொது நவம்பர் 23,2021 | 17:00 IST
மயிலாடுதுறையில் இருந்து பொறையாருக்கு 27 ஏ அரசு பஸ் புறப்பட்டது. 90 பயணிகள் பஸ்சில் இருந்தனர். கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி வந்தனர். மயிலாடுதுறை பெரிய மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது பின்புற படிக்கட்டு உடைந்தது. அந்நேரம் பஸ் மெதுவாக சென்றதால் மாணவர்கள் பத்திரமாக கீழே இறங்கினர். யாருக்கும் காயம் இல்லை. பஸ் வேகமாக சென்றிருந்தால் நிச்சயம் அசம்பாவிதம் நடந்திருக்கும்; அரசு பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பது இதன்மூலம் உறுதியாகி விட்டதாக, பயணிகள் குற்றம்சாட்டினர். ஓட்டை உடைசல் பஸ்களை கழித்து விட்டு, கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வாசகர் கருத்து