Advertisement

சென்னையில் ஒரே மாதத்தில் 100 செ.மீ மழை | Chennai 100 cm of rain | HeavyRain

பொது நவம்பர் 28,2021 | 08:16 IST

Share

சென்னையில் கடந்த ஒரே மாதத்தில் 100 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இது, கடந்த 200 ஆண்டுகளில், நான்காவது முறை என்று வானிலை வல்லுனர்கள் கூறுவதாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், இத்தகயை கடும் மழையிலும், உயிர் பலிகளை தடுத்து முடிந்தவரை உடைமை சேதங்களை குறைத்திருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார். பாதிப்புகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்துள்ளோம். ஓய்வு உறக்கம் இன்றி பணியாற்றிவரும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள்தான் இதற்கு காரணம். மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், நேரம் காலம் பார்க்காமல் பணியாற்ற வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X