Advertisement

ஊரப்பாக்கத்தில் பரபரப்பு | Rain | Building damage

பொது நவம்பர் 30,2021 | 18:30 IST

Share

சென்னை புறநகர் பகுதியான ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகரில் 30 அடி அகலம் கொண்ட மழைநீர் கால்வாய் ஓடுகிறது. இது, நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கியது. தொடர் மழை காரணமாக கால்வாயிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஜெகதீஷ் நகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கால்வாயை ஒட்டி கட்டப்பட்டுள்ள 4 மாடி அபார்ட்மென்ட்டின் தரைத்தளத்தில் உள்ள வீட்டில் குணசேகரன் -ஸ்ரீவித்யா தம்பதியர் வசித்து வருகின்றனர்.  காலையில் வீட்டின் ஹாலில் திடீரென 8 அடி ஆழத்திற்கு மிகப்பெரிய பள்ளம் உண்டானது. நல்லவேளை, அப்போது, படுக்கையறையில் இருந்ததால் தம்பதியர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். திடீர் பள்ளத்தில் மழைவெள்ளம் ஓடுவதைக் கண்ட குணசேகரன் அதிர்ச்சியடைந்தார். கட்டடத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு அதன் வழியாக உள்ளே வரும் மழைநீர், குணசேகரன் வீட்டு ஹால் வழியாக ஓடுவதைக் கண்ட அபார்ட்மென்ட்வாசிகள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர். கட்டடத்தின் ஸ்திரத்தன்மையை நினைத்து அங்கு வசிப்பவர்கள் கவலையடைந்துள்ளனர். அசம்பாவிதம் நடக்கும் முன் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அபார்ட்மென்ட் வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


வாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

அப்புசாமி
அப்புசாமி , . 01-டிச-2021 | 09:28:26 IST Report Abuse

எதுக்கும் கொஞ்சம் சாப்புட்டுப் பாருங்க. கோதாவரி தண்ணீர் கொண்டு வந்துட்டாங்கன்னு கேள்வி.

Rate this:
Reply

மேலும் 2 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X