Advertisement

நிதின் கட்கரி தகவல்|Automobile companies|produce |bio-ethanol |vehicles

பொது நவம்பர் 30,2021 | 20:30 IST

Share

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதிக்காக மட்டும் இந்தியா ஆண்டுதோறும் 8 லட்சம் கோடி ரூபாயை செலவழிக்கிறது; நாம் பெட்ரோல், டீசலை மட்டுமே நம்பியிருக்கிறோம்; இப்படியே போனால் அடுத்த ஐந்தாண்டுகளில் 25 லட்சம் கோடி ரூபாய்க்கு பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை வந்துவிடும். பெட்ரோலிய பொருள் இறக்குமதியை குறைக்கும் வகையில் முக்கியமான உத்தரவில் 2, 3 நாளில் கையெழுத்திட போகிறேன். ஒன்றுக்கு மேற்பட்ட எரிபொருளில் இயங்கும் இன்ஜினுடன் கூடிய கார்களை தயாரிக்கும்படி வாகன உற்பத்தியாளர்களை அந்த உத்தரவின் மூலம் கேட்டுக்கொள்ளவிருக்கிறோம் என கட்கரி கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X